வாழ்க்கை பயணத்தின் இனிய துவக்கம்
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது, திருமணம் 1000 காலத்துப் பயிர் என்று திருமணம் சார்ந்த பல பழமொழிகள் உள்ளன! பெரியவர்கள் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, காதல் திருமணமாக இருந்தாலும் சரி திருமணத்திற்கு தயாராவது என்பது அவ்வளவு சுலபமில்லை. சுற்றமும் நட்பும் சூழ, நூற்றுக்கணக்கானவர்களின் ஆசீர்வாதத்தோடு, மகிழ்ச்சியும் குதூகலமும் பொங்க, ஒரு புதிய உறவு மலரும்! புதிய உணர்வுகள், இனம் புரியாத உணர்ச்சிகளுடன், மனம் கொள்ளாத மகிழ்ச்சியுடன் திருமண பந்தத்தில் இணைவார்கள்.
“நினைவெல்லாம் உயிர்பெரும் தருணம்”
கோவிலில் இறைவனின் சன்னதியில் எளிமையாக திருமணம் செய்தாலும் சரி, லட்சக்கணக்கில் செலவு செய்து திருமணம் செய்தாலும் சரி, அதில் மணமக்களுக்கு இணையானது திருமண விருந்து! திருமணம் எப்படி எல்லாம் ஆடம்பரமாக நடந்தது. எவ்வாறு உபசரித்தார்கள் என்பதைக் கடந்து, திருமண விருந்து எவ்வளவு சுவையாக இருந்தது என்பது தான் காலம் காலமாகப் பேசப்படும். அதே போல, திருமணம் எவ்வளவு சிறப்பாக நடந்தாலும், கல்யாண சாப்பாட்டில் குறையிருந்தால், காலம் முழுக்க அதைப் பற்றி பேசுவார்கள்.
மேலும், உறவுகளுக்கும் நட்புக்கும் திருமண பத்திரிக்கை கொடுக்கும் போது, யார் கேட்டரிங் என்ற கேள்வியைத் தவிர்க்கவே முடியாது. திருமணம் பேசும் போதே, இந்த கேட்டரிங் நிறுவனம் தான் திருமணத்துக்கு ‘புக்’ செய்ய வேண்டும் என்ற நிபந்தனையும் விதிப்பார்கள். அந்த அளவுக்கு, ஒவ்வொரு கல்யாணத்திலும் திருமண கேட்டரிங் சேவைகள் முக்கியமானது.
திருமண வைபவம்
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், ஒரு தலைமுறைக்கு முன்பு வரை, ஒரு வீட்டில் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது என்றாலே, உறவினர்கள் அனைவரும் முகூர்த்த நாளுக்கு முன்பே கூடி விடுவார்கள். உறவுகள் மொத்தமும் ஒன்று சேர்ந்து திருமண வைபவத்தை சிறப்பாக நடத்தும். இதில் திருமணத்துக்கான சமையலும் அடங்கும். கால மாறுதலுக்கு ஏற்ப, பலரும் காலில் சக்கரம் கட்டிக் கொண்டும், இறக்கை கட்டிக்கொண்டும் பறக்கும் சூழலில், பல சேவைகளும் வீடு தேடி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. அதில் மிகவும் முக்கியமான மாற்றம் தான் திருமண நிகழ்வுகளுக்கு சமைப்பது. வீட்டில் விசேஷங்களுக்கு சமைப்பதே சிறப்பாக இருக்க வேண்டும் என்று எல்லாரும் விரும்பும் நிலையில், கல்யாண சமையல் என்பது சாதாரணமா என்ன?
அன்பான உபசரிப்போடு ஆரோக்கியமான உணவைப் பெறுங்கள்
திருமணத்துக்கு வருபவர்களை உபசரித்து, மனதும் வயிறும் நிறைய சாப்பிட வைப்பது முக்கியம். எனவே, திருமண செலவுகளில் உணவுக்கு கணிசமான தொகை செலவிடப்படுகிறது. மணமகன் / மணமகள் அழைப்பு விருந்து முதல், நிச்சயதார்த்தம். ரிசப்ஷன், முகூர்த்தம் என்று கட்டுசாதக் கூடை வரை, ஒவ்வொரு வேளைக்கும், விதிவிதமான உணவு வகைகளை, அசத்தலான சுவையில் வழங்குகிறது, மிஸ்டர். செஃப் கேட்டரிங் சேவை. கல்யாண ரிசப்ஷனுக்கு வட இந்திய சாட் உணவுகள் முதல் மேற்கத்திய உணவுகள் வரை வரிசை கட்டி பரிமாறுவதில், மிஸ்டர் செஃப் கேட்டரிங் சேவைக்கு இணையில்லை. அதே போல, எல்லா நேரங்களிலும், தவறாமல், காஃபி, தேநீர், சூடான பானங்கள், பழச்சாறுகள் என்று வழங்கப்படும். நவீன உணவுகள் திருமணங்களின் ஒரு பகுதியாக இருந்தாலும், பாரம்பரிய உணவுகள் இல்லாமல் கல்யாணமா? கல்யாண சாம்பார், கல்யாண ரசம் என்றே திருமண முகூர்த்தத்துக்கு மட்டுமே சமைக்கப்படும் தனிப்பட்ட சுவையுடைய உணவுகள் உள்ளன, முகூர்த்தம் தவறிவிடக் கூடாது என்று சொல்வது போலவே, முகூர்த்த விருந்தையும் தவறவிட்டுவிடக் கூடாது. பாரம்பரியமான முகூர்த்த விருந்தை வழங்குவதில் மிஸ்டர் செஃப் சேவைக்கு இணையில்லை. மிஸ்டர் செஃப் வழங்கும் கல்யாணப் பந்தியில் அமர்ந்தவர்கள், மணமக்களை மறந்து, முகூர்த்த விருந்தைப் பற்றித் தான் பேசுவார்கள்.
எங்கள் சுவையான உணவுகளுடன் உங்கள் சுவை மொட்டுகளை மலர விடுங்கள்
அறுசுவை விருந்தும் விருந்தோம்பலும் - விதவிதமான பண்டங்களை மட்டும் சமைக்கும் நிறுவனத்தை தேர்வு செய்தால் போதுமா? கேட்டரிங் சர்வீஸ் என்பது சமைத்து பரிமாறுவது மட்டும் அல்ல. சிரத்தையாக சமைத்து, நேர்த்தியாகவும் அன்புடனும் பரிமாறுவதும் ஆகும். எனக்கு சுவை தான் முக்கியம், எனக்கு விதவிதமான உணவுகள் வேண்டும், எனக்கு வட நாட்டு உணவுகள் தேவை, நாங்கள் பாரம்பரிய உணவுகளை விரும்புகிறோம் மண்மணம் மாறாத கல்யாண சாப்பாடு தான் எங்களுக்குத் தேவை மார்டனாகவும் வேண்டும், பாரம்பரியமாகவும் வேண்டும் எங்கள் பட்ஜெட் இவ்வளவு தான் உங்களுடைய தேவை எதுவாக இருந்தாலும், மிஸ்டர் செஃப் கேட்டரிங் சர்வீஸ் நிறைவேற்றும். திருமணத்திற்கு வரும்போது ஒவ்வொரு நிகழ்வும் மறக்க முடியாத ஒன்று. மிஸ்டர் செஃப் கேட்டரிங் சேவைகள், ஒவ்வொரு மகிழ்ச்சியான நிகழ்வின் போதும், அதன் சுவையை நினைவுகூரும் வகையில் சுவையான, அற்புதமான, உணவுகளை வழங்குகிறது. மிஸ்டர் செஃப் கேட்டரிங் சேவைகளிடம் தயாராக கல்யாண விருந்துக்கள் மெனுவும் இருக்கிறது. இதனால், உங்கள் வேலை மிக மிக எளிதாகிவிடும். மிஸ்டர் செஃப் கேட்டரிங் கோயம்புத்தூர் மட்டுமல்லாமல் அதனைச் சுற்றியுள்ள முக்கிய நகரங்களான திருப்பூர்,பொள்ளாச்சி,குன்னூர்,ஊட்டி,திருப்பத்தூர்,கரூர்,மேட்டூர்,பழனி போன்ற இடங்களிலும் முழுமையான கேட்டரிங் சேவை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாகும். திருமணம் உள்ளிட்ட எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் சிறந்த முறையில், சுவையான தரமான உணவுகளை செய்து தருகிறோம். நியாயமான விலையில் ஆரோக்கியமான உணவுகளை தனித்துவத்துடன் வழங்குகிறோம். விருந்தினர்கள் அனைவரும் வயிறும் மனதும் நிறைந்து வாழ்த்திட Mr. Chef கேட்டரிங் சேவையை இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்.
“நல்ல தயாரிப்புகளோடு உணவைப் பெற்று உங்கள் திருமண நாளை மேலும் சிறப்பானதாக்குங்கள்”
“எங்கள் விருந்தோம்பல் உங்கள் விருந்தினர்க்கு”
WE ARE PROUD!!!
We are receiving recognition and accolades, thanks to you, our loyal clients!
Mr.Chef’s Catering Services won the "Best Caterers Award" at the Coimbatore ARTIC AWARDS.
We believe our services have pleased our customers so far. We will leave no stone unturned with our hospitality and variety of cuisine. We thank all our customers and Arctic Awards team for this honour.